இந்திய பயணிகள் கப்பலான MS Empress தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டிணைவின்படி, இந்த கப்பல் நேற்று (05) பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.
MS Empress ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 796 அறைகளைக் கொண்டுள்ளது.
நவீன வசதிகள் நிறைந்த இந்தக் கப்பல் மூலம் முதல் 04 மாதங்களில் மட்டும் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது