போலி ஆன்லைன் கடன் திட்டத்தைப் பயன்படுத்தி
கம்பஹா பிரதேசத்தில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 15 இலட்சம் ரூபாவை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வாகனங்களை விற்பனை செய்பவர்கள் உட்பட பொதுமக்களை இலக்கு வைத்து சலுகைக் கடன்களை விளம்பரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் பெறப்பட்ட தேசிய அடையாள அட்டைகளின் கீழ் சிம் அட்டைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அதன் பின்னர், சிம் கார்டுகளைப் பயன்படுத்தி அவர்களது வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
சந்தேகநபர் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களிடம் நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பிரதேசத்தில் இருந்து மாத்திரம் 15 மோசடிகள் தொடர்பான விபரங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளில் சந்தேகநபர் 70 வங்கிக் கணக்குகளின் விபரங்களை வைத்திருந்ததாகவும், அவர் கிட்டத்தட்ட ரூ. 3 மில்லியன் இனை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.