முகப்புத்தகத்தில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண்ணாக தன்னை காட்டிக்கொண்ட சந்தேக நபர், பேஸ்புக் ஊடாக அவருடன் உரையாடி பின்னர் கம்பஹாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.