வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்ட 14 துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்தவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2023 டிசம்பர் 31ம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 8 வயதை அடையும் சகலரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.