மரியாதைக்குரிய அடையாளமாக ஆதரவாளர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்ததால், இறந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்ணொருவர் வெற்றி பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் முனிசிபல் சிவில் பதவிக்கான தேர்தலில் ஆஷியா பி எனும் பெண் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்று, அவரது இறப்புக்கு பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
30 வயதான இப்பெண் முதல் முறை வேட்பாளர்; பின்னர் கடுமையான நுரையீரல் மற்றும் வயிற்றுத் தொற்று காரணமாக நோய்வாய்ப்பட்டு வாக்கெடுப்புக்கு 12 நாட்களுக்கு இருக்கும் நிலையில் இறந்தார்.
இவரது இறப்பின் பின்னர், அவரது கணவர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார், ஆனால் மாவட்ட அதிகாரி பகவான் ஷரன் வாக்குச்சீட்டில் இருந்து அவரது பெயரை நீக்க எந்த நடைமுறையும் இல்லை என்று கூறினார்.
"தேர்தல் செயல்முறை தொடங்கியதும், அதை நிறுத்தவோ அல்லது இடைநிறுத்தவோ முடியாது" என்று ஷரன் கூறினார்.
ஆஷியா பி இறப்பதற்கு முன் வாக்காளர்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றிருந்த நிலையில், மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் விதமாக பலர் அவருக்கு வாக்களிக்க முடிவு செய்திருந்ததாக பல உள்ளூர் வாசிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)