பாடசாலை உபகரணங்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ - எகொடஉயன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் எகொட உயன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, எகொட உயன காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.