கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) காலை 08:15 மணியளவில் கெலிஓயா பகுதியில் வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற 22 வயதேயான யுவதி முனவ்வரா ஜின்னா, கடந்த 06 நாட்களாக காணவில்லை என உறவினர்கள், பொலிஸார் தேடி வந்த நிலையில் அவர் காட்டுக்குள் கொலை செய்ய்யபட்டு புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி வெலிகல்ல, பழைய எல்பிட்டி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இந்த யுவதி, கெலிஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றுபவர் என யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.
பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்று அவரின் சகோதரர் தெரிவித்துள்ள நிலையில் அவர் எல்பிட்டியவில் வைத்து காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.