பண்டாரவளை பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதலின் காணொளிக் காட்சிகள் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர அந்த இடத்தில் சண்டையிட்ட மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று (23) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.