16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (29) இடம்பெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நேற்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஹகமதாபாத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக போட்டி தாமதமானதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக நேற்றிரவு 9.40 மணியளவில் போட்டியை ஆரம்பிக்க முடியுமாயின் 20 ஓவர்கள் விளையாட முடியும் என தீர்மானிக்கப்பட்டது.
போட்டி ஆரம்பமாவதில் இன்னும் தாமதமாகுமாயின் ஓவர்கள் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், நள்ளிரவு 12.06க்கு முன்னர் போட்டி ஆரம்பிக்கக்கூடிய நிலைமை காணப்படுமானால், 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தி போட்டி நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்னும் மழை இடைவிடாது பெய்து வருவதனால் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.