அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-605 என்ற விமானத்திலேயே மரணம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.