ஆறு பொருட்களின் விலையை இன்று (24) முதல் அமுலாகும் வகையில் சதொச குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் சதொச பால் மா விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.
அத்துடன், ஒரு கிலோகிராம் உலர்ந்த மிளகாய் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 1,350 ரூபாவாக உள்ளது.
மேலும், சிவப்பு பருப்பு, சோயாமீட், வெங்காயம் மற்றும் வெள்ளை சர்க்கரை போன்ற பொருட்களின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 325 ரூபாவாகவும், சோயாமீட் விலை 660 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்தின் விலை 129 ரூபாவாகவும், வெள்ளை சீனியின் விலை 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.