இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, மே 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் கணக்குகளை நீக்கிய பின்னர், அதனுடன் தொடர்புடைய ஏனைய சமூக வலைத்தள கணக்குகளும் முடக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை ஒருமுறையேனும் பயன்படுத்துவதனால் இந்த நடவடிக்கையில் இருந்து தனது கூகுள் கணக்கை காப்பாற்றிக்கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.