மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தில் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தில் அதிகரிப்பு!


இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.


அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை இல்லாது செய்வதா? அல்லது தொடர்வதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.