கடன்கள் தள்ளுபடி தொடர்பில் வெளியான தகவல்களை முற்றாக மறுப்பதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து சில சமூக ஊடக வலைத்தளங்களில் அண்மையில் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பான அறிவிப்பொன்றை நேற்றைய தினம் (15) மக்கள் வங்கியின் நிர்வாகம் விடுத்துள்ளது.
அத்தகைய கருத்துக்களின் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லையென்றும் அந்த கருத்துக்களை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எழக்கூடிய சந்தேகங்களையும் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.