அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 300.65 ஆகவும் விற்பனை விலை ரூ. 314.08 ஆக காட்டப்பட்டது.
அமெரிக்க டொலரின் மதிப்பு நேற்று (18) ரூ. 300க்கும் கீழ் குறைந்திருந்தது.
இதன்படி, இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்தைக் காட்டும் பட்டியல்களில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 300 என்ற வரம்பிற்கு கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது.
மக்கள் வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 296.59 மற்றும் விற்பனை விலை ரூ. 313.52 காட்டப்பட்டது.