வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிரம்பிய புதைக்குழியொன்றிலிருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த இருவரென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.