பெளத்த மதம் உட்பட மதங்களை அவமதித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தீர்மானித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்தது. அதற்கு முன்தினம் சிங்கப்பூர் சென்ற அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ தனது போதனைகளை ஆற்றும் கட்டுநாயக்க மினுவங்கொட வீதியிலுள்ள ''மிராக்கிள் டோம்'' எனப்படும் சமய நிலையத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட பெறுமதி 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கான நான்கு ஏக்கர் நிலம் அந்த சபையில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர் ஒருவர் மற்றும் அவரது மனைவியால் வழங்கப்பட்டுள்ளது.
லண்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஹொங்கொங், துபாய், அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் இந்நாட்டிற்கு பிரார்த்தனை சேவைகளுக்காக வருகை தருவதுடன், இந்நாடுகளும் இந்த நிறுவனத்திற்கு உதவித் தொகையைப் பெற்றுக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சமய சபைக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் பணத்திற்கு ரசீது வழங்கப்படுவதில்லை எனவும், குறைந்தபட்ச உதவித்தொகை ஐந்து இலட்சம் ரூபாவாகும் எனவும் தெரியவந்துள்ளது. தேவாலய கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு செங்கல் ஐந்து லட்சத்துக்கு விற்கப்பட்டது எனவும் தெரிவிக்கபடுகிறது.
இந்த நிறுவனம் உண்டியல் முறையில் மூலம் பெறும் பணம் துபாய், கத்தார், இங்கிலாந்து கணக்குகளில் வைப்பு செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
கல்கிஸ்ஸ மற்றும் ஹெவ்லொக் சிட்டியில் உள்ள விலையுயர்ந்த இரண்டு வீடுகள் ஆயர் குடும்பத்தினரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.