சுமார் இரண்டு வயதேயான குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் வடகொரியாவில் இடம்பெற்றுள்ளது.
வடகொரியாவில், அண்மையில் பைபிள் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு வயதேயான குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 50,000 தொடக்கம் 70,000 வரையிலான கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.