நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், சீரற்ற வானிலையினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் கைபேசிகளை எப்போதும் முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்து வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஏனெனில் செயலில் உள்ள கைபேசி இணைப்பு பேரழிவு ஏற்படுமாயின் உதவிகளை பெறுவதற்கு இலகுவாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.