மூன்று புதிய மாகாண ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மே 17) நியமித்துள்ளார்.
புதிய ஆளுநர்கள் மூவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநராக கடமையாற்றிய பி. எஸ். எம்.சார்ள்ஸ் மீண்டும் வடமாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வடமேல் மாகாண ஆளுநராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜீவன் தியாகராஜா (வடக்கு ஆளுநர்), அனுராதா யஹம்பத் (கிழக்கு ஆளுநர்), அட்மிரல் ஆஃப் ஃப்ளீட் வசந்த கரன்னாகொட (வடமேற்கு ஆளுநர்) ஆகியோர் திங்கட்கிழமை (மே 15) அவர்களின் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கப்பட்டதை அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)