யாசகம் கேட்டு கொடுக்காத வைத்தியர் படுகொலை!

யாசகம் கேட்டு கொடுக்காத வைத்தியர் படுகொலை!


தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.


வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News