நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 306.38 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
நேற்று நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 308.66 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 322.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.