பொலன்னறுவை பிரதேசத்தில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 41 வயதுடைய டியூஷன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையில் கல்வி வகுப்புகளை நடத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் பல தடவைகள் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஆறு பேரின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் பெற்றோர்கள் முன்வரத் தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.