கடந்த வாரம் கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் பல்லின மக்கள் வாழக்கூடிய இலங்கைத் திருநாட்டில், ஏனைய மக்கள் வழிபடும் மதங்களை தாழ்த்தியும் அவர் பின்பற்றும் மதத்தை உயர்த்தியும் போதனை ஒன்றை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இதை நாலு தேரர்கள் நடு வீதியில் நின்று ஊத நாட்டில் இன்று இந்த விடயம் தீப்பொறியாய் பறக்கின்றது
இவ்வளையில் முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டியது என்ன?
இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் போதனைகளையும் சில அரசியல் வாதிகள் காலத்துக்கு காலம் அவரவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியிடுவதுண்டு.
இவ்வாறான கருத்துக்களும் போதனைகளும், அவ்வப்போது அவற்றை எதிர்த்து நிற்கும் எதிர்ப்பலைகளின் அழுத்தத்தை பொருத்தும், எதிர்க்கும் நபரைப் பொருத்தும், எதிர்க்கும் சந்தர்பங்களை பொருத்தும், அதன் விம்பங்கள் புலியாகவும் பூனையாகவும் தோற்றம் பெறுகின்றன .
இது இவ்வாறு இருக்க, நமது நாட்டைப் பொறுத்தவரையில் அரசியல் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக ஆரம்பத்தில் இருந்து கைக் கொள்ளப்பட்ட ஒரு ஆயுதமே இனவாதமாகும்.
ஆரம்பத்தில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தை ஜே. ஆர் ஜயவர்தனா தலைமையில் எதிர்த்து தேரர்கள் ஆர்பாட்டம் செய்த போது , ஆர்ப்பாட்டம் செய்த தேரர்களை விதிக்கு சந்திக்க வந்த பண்டாரநாயக அவர்கள், "எனது மக்கள் விருப்பமில்லாதவற்றை நான் நிறைவேற்ற மாட்டேன்" என ஆர்பாட்டக்காரர்களின் முன்நிலையில் நடுவீதியில் தனது கோட் பையில் இருந்து ஒப்பந்தத்தை வெளியில் எடுத்து தேரர்களின் முன் தீவைத்து எரித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் அரசியலுக்கா மாறி மாறி வந்த அரசியல் கட்சிகளால் இவாதம் கைக்கொள்ளப்பட்து.
அன்று தீயிட்டுக் கொழுத்தி ஏற்றிவைத்தை இனவாதத்தீயை இன்றும் கூட அனைக்க முடியவிலை. காலத்திற்குக் காலம் நாட்டு மக்கள் இனவாதத்தீயினால் வாடி வதைகின்றனர்.
அவர் அன்று அரசியலுக்காக ஏற்றி வைத்த அந்தத் தீ இன்றும் கூட காலத்திற்கு காலம் சில மக்களின் உயிர்களையும் விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கின்றன.
பண்டா செல்வா ஒப்பந்தம் செய்ததிலும் அரசியல் லாபம்; எரித்ததிலும் அரசியல் லாபம்.
இவ்வாறான ஒரு நிலையில் நாடு ஒரு தேர்தலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இவ்வாறான ஒரு சர்சைக்குரிய உறை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன் குறிப்பிட்டது போல் காலத்திற்குக் காலம் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அவற்றைப்பற்றி யாருமே கண்டு கொள்ளாத போது அவை ஓயந்து விடுகின்றது. மக்கள் மத்தியில் செல்வதில்லை.
ஆனால் இம்முறை சர்ச்சையை கிளப்பியவர் ஒரு சாதாரண நபர் அல்ல, அதி உயர் அரசியல், பண செல்வாக்கு உள்ளவர். அதை எதிர்கும் தேரர்களும் ஏற்கனவே நாட்டின் இனவாத பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தவர்கள். அரசியல் வாதிகளின் கைக்கூலிகள்.
இவர்களில் நால்வர் நடு வீதியில் நின்று ஊதியதால் இது நெருப்பாக மாறியதோடு மக்களின் மண்டையிளும் ஏறியது.
இருந்தாலும் இதை தேரர்களும் அரசியல் வாதிகளும் ஊதிப் பெருப்பிக்கும் அளவி்ல் பெரும் பான்மை மக்கள் இன்று இதை கண்டு கொள்வதாக இல்லை.
செய்தித்தளங்களில் வெளியாகும் இவைபற்றி செய்திகளையும் காட்டூன்களையும் ஆராயும் போது இதன் உண்மை நிலையும், இது பற்றிய மக்களின் அவதானம் எந்தக் கோணத்தில் நின்று நீக்கப்படுகின்றது என்பது புலப்படுகின்றது.
இவை எதிர்பார்த்த அறுவடையை கொடுப்பதாக தெரியவில்லை.
காரணம் அண்மைக்காலமாக இலங்கையி்ல் நடந்த இனவாத அரசிலில் மக்கள் பாடம் கற்றுவிட்டனர் என்றே கருத வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் ஊதி பூதாகரமாக ஆக்காமல் இருந்தால் இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து இருக்காது என்பதே உண்மை.
ஆக நாம் இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
தீயை கொளுத்தியவர்களும் பிரபல அரசியல் பின்னணியில் உள்ளவர்கள். ஊதியவர்களும் பிரபல அரசியல் பின்னணியில் உள்ளவர்கள்.
இரு தரப்பு சக்திகளும் ஒரே கூறையின் கீழ் இருந்து செயல்படுகின்றதா என்பதை சிந்திக் வேண்டியுள்ளது.
எனவே இதன் பின்னணியை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வீசும் ஒரு வளையாகவே கருத வேண்டி உள்ளது.
தற்போது முஸ்லிம் சமூகம் இது சம்பந்தமாக அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
ஏற்கனவே இதுபோன்ற பல பாடங்களை நாம் நம் நாட்டில் கற்றுக் கொண்டோம். ஹலால் அனுமதியை தந்தவர்களே ஹலால் சம்பந்தமான பிரச்சினையை பின்னணியில் இருந்து தூண்டியும் விட்டார்கள்.
அனுமதி தந்ததிலும் அரசியல், பின்னிருந்து இதை தூண்டி விட்டதிலும் அரசியல்.
கொரோணா ஜனாஸாக்களை அடக்கம் செய்வது சம்பந்தமான பேச்சவார்த்தை கூட்டத்திற்கு தேவைப்பட்டது மருத்துவ, புவியில் நிபுணர்களும் அதி உயர் மட்ட பிரமுகர்களும் மாத்திரமே.
ஆனால் அந்தக் கூட்டத்திற்கு அடக்கம் செய்ய கோரிக்கை வைத்த முஸ்லிம்களும் வரவழைக்கப்பட்டார்கள்.
அத்துறையில் எந்தவித அறிவும் இல்லாத அடக்கம் செய்வதை எதிர்த்த இனவாத அரசியல்வாதிகளும் வரவழைக்கப்பட்டார்கள்.
பேச்சுவார்த்தையிலும் அரசியல் லாபம். இனவாதிகளை வைத்து எதிர்த்ததிலும் அரசியல் லாபம். எனவே இதிலும் இருபக்க அரசியல்.
எனவே இச்சந்தர்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை பற்றி சிந்திக்கும் போது, சர்ச்சைக்குரிய விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பவும் முடியவில்லை.
கடந்த காலத்தில் இனவாதத்தால் முஸ்லிம்களின் வீடு வாசல்கள் வியாபாரத் தலங்கள் அளிக்கப்பட்டபோது, ஒரு சிலரை தவிர அனைவரும் வாய் மூடி இருந்ததை நாம் கண்கூடாகக் கண்டோம்
சமூகத்திக்கு பாதிப்பான திருத்தங்கள் வரும்போது, தலைவர் எதிர்த்து நிற்பார். தலைவர் ஆதரவளிப்பார். இதுவே முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு.
ஆன்மீக துறையைப்பற்றி சிந்திக்கும் போது , அதைப் பற்றி பேசுவதே நேரம் வீண். பிரச்சனை என வரும்போது சர்ச்சைக்குரிய விடயங்களில் தலையிட மாட்டோம் என தமக்குல் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்வார்கள். தேவையான விடயங்களில் தலையிடாமல், தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைப்பார்கள்.
எனவே இவ்வாறான பல பாடங்களை நாம் நமது நாட்டில் கடந்த காலங்களில் நாம் படித்து விட்டோம். இவை யாவற்றையும் நாம் மறந்து செல்ல, இவை அனைத்தும் கனவுகளோ நினைவுகளோ அல்ல. அத்தனையும் நிகழ்வுகளும் நிஜங்களுமே ஆகும்.
ஆகவே தொடர்ந்து வரும் காலங்களில் முஸ்லிம் சமூகம் அவதானமாக செயல்பட வேண்டும்.
இதன் பின்னணி என்ன என்பதை யோசித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
இந்த நாடகத்தின் பின்னணியை விளங்கிய பெரும்பான்மை சமூகம் இம்முறை இவை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
எனவே முஸ்லிம் சமூகம் இவ்வாற நாடகங்கங்களிளும் சதிகளிலும் சிக்கிக் கொள்ளாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.
-பேருவளை ஹில்மி