நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றிற்காக அபராதமாக செலுத்தப்பட்ட 21,000 ரூபாவிற்குள் மஹியங்கனை மாவட்ட நீதிமன்ற அதிகாரிகள் போலி 5000 ரூபாய் நோட்டைக் கண்டுபிடித்ததை அடுத்து 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபராதமாக செலுத்தப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள் இருப்பது குறித்து நீதிமன்ற ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, 39 வயதான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (12) மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)