சமீபத்திய எதிர்ப்பு தீவிரமடைந்ததால் இந்திய ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டனர்
ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது பாதுகாவலர்களும், டெல்லி போலீஸாரும் அவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள டென்ட்டுகளையும் போலீஸார் அகற்றினர்.
வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா என நாடறிந்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனையும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தலைநகர் டெல்லியில் ஏற்படுத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது பாதுகாப்பு வளையத்தை அவர்கள் தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள டென்ட்டுகளையும் போலீஸார் அகற்றினர்.
வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா என நாடறிந்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனையும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தலைநகர் டெல்லியில் ஏற்படுத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது பாதுகாப்பு வளையத்தை அவர்கள் தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.
போலீஸாரின் எச்சரிக்கையை மீறி புதிய நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி அவர்கள் முன்னேறியதே கைது நடவடிக்கைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது ஒருவருக்கொருவர் தள்ளி விட்டனர். இதனால், பரபரப்பாக காணப்பட்டது. தன்னை கைது செய்ய வினேஷ் போகாட் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும், அவர்களை இழுத்து தூக்கி பேருந்துகளில் போலீஸார் ஏற்றினர்.
-இந்திய ஊடகம்