கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் நடாத்திச் செல்லப்பட்ட அல் சுஹரியா மத்ரஸா பாடசாலையில் மாணவர்களுக்கு போதனை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான இருவர் உள்ளிட்ட 04 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் நேற்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.