இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும்! -நடிகை உபேக்‌ஷா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும்! -நடிகை உபேக்‌ஷா


இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக நடிகை என நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி தெரிவித்தார்.

யூடியூப் செனல் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றமையை தடுக்க நாட்டில் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா என கேட்கப்பட்டமைக்கு பதில் அளித்த அவர் ,

தான் குவைத்தில் வளர்ந்த பெண் என்பதனால் அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு தொடர்பில் தானும் தனது தாயும் நன்கு அறிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் 200 சதவீதம் நிரூபிக்கப்பட்டால் அரபு நாடுகளில் போன்று இதுபோன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதாக அதிகாரத்திற்கு வந்த மைத்திரிபால சிரிசேன கடைசியில் மரண தண்டனை கைதியை விடுதலை செய்துவிட்டு வீடு சென்றார் என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.