கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் சந்தையில் மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 1.000 முதல் 1,200 ரூபாவாக நிலவிய கோழி இறைச்சி கிலோவொன்று 1,500 ரூபா முதல் 1,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் சந்தையில் மீனின் விலையும் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோவொன்று 1,900 ரூபாவிற்கும், பலயா மீன் கிலோவொன்று 1,400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த விலை உயர்விற்கு இணையாக சாதாரண சந்தைகளிலும் மீனின் விலை உயர்ந்துள்ளது.
இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத், கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.