கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பாலி எனப்படும் இக்பால் என்ற தீவிரவாதி பாகிஸ்தான் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த நபர் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்.
கொல்லப்பட்ட நபர் பயங்கரவாதம், கொலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கடத்துதல் போன்ற வழக்குகளில் தேடப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், கைபர்-பக்துன்க்வா பொலிஸ் தலைமையதிகாரி- அக்தர் ஹயாத் கான், தேடுதல் ஒன்றின்போது, இக்பால், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியபோது பொலிஸார் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இக்பால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.