பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் மேல் மாகாணத்திற்கே அவை விநியோகம் செய்யப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திற்கான பால் மா விநியோகத்தினை அடுத்தே ஏனைய மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் பொதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் விலைக்குறைப்பு செய்யப்பட்ட பால்மா பொதிகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சிறிது காலம் தேவைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.