ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை (01) விசேட உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் ஜனாதிபதி முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.