ஹோட்டல் அறைக்குள் தங்கியிருந்த போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதனையடுத்து அவர் கலவரமடைந்து அறையின் ஜன்னலில் இருந்து குதித்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மவ்பிமவின் கூற்றுப்படி , பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும், மேலும் அவர் சிறுமியை தள்ளவில்லை என்றும் அவர் தவறுதலாக விழுந்துவிடவில்லை என்றும் சந்தேகநபர் கூறினார்.
இவர்களுடன் ஹோட்டலுக்குச் சென்ற தம்பதியரே பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தேக நபருக்கு அறிமுகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுத்துறை நகரை வந்தடைந்தவுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தம்பதியினர் சந்தேக நபரின் வாகனத்தில் ஏறி ஹோட்டலுக்குப் பயணித்துள்ளனர்.
ஐந்தாவது மாடியில் இரண்டு அறைகள் அவர்களால் முன்பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ஒரு அறையில் குடியேறி மது அருந்தியுள்ளனர். பின்னர் தம்பதியினர் அறையை விட்டு வெளியேறிய நிலையில், சந்தேகநபரும் பாதிக்கப்பட்டவரும் அறையில் தங்கியிருந்ததாக சந்தேக நபர் வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது நண்பர் தனது கையடக்கத் தொலைபேசியில் அழைத்து கிண்டல் செய்ததாகவும், பின்னர் அவர் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
ஒருவரைத் தள்ள முடியாத அளவுக்கு ஜன்னல் சிறியதாக இருந்ததாலும், ஜன்னல் ஓரங்களில் அடையாளங்கள் இல்லாததாலும் இது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)