வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் சலுகை கிடைத்ததாக இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய அந்நியச் செலாவணியின் தொகையின் அடிப்படையில் அவர்கள் விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.