மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) காலை அவர் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்றதாக அவரின் நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். எனினும் விரைவில் வேறொரு இடத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்சம் இரண்டு நாடுகளுக்கு அவருக்கு பல விசாக்கள் இருப்பதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவருக்கு நெருங்கிய தரப்பு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், போதகர் ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை குடிவரவுத்துறை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் இவருக்கு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.