இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவுத் திணைக்கள் ஆணையாளர் நாயகம் பிரதீப் சப்புநந்திரி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுவரையிலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள், அதற்கான விண்ணப்பத்தை உரிய பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டாலும் விண்ணப்பம் கிடைத்தமைக்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்காவிடின் விண்ணப்பதாரிகள், அந்த திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவரையிலும் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை பிழையின்றி பூர்த்திச் செய்து கல்விக்கற்கும் பாடசாலையின் அதிபர் அல்லது நிலையான வதிவிட பிரிவில் இருக்கும் கிராம சேவகர் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
விண்ணப்பங்கள் கிடைத்தமை தொடர்பிலான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்காத விண்ணப்பத்தாரர்கள் 0115226100 அல்லது 0115226162 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், மேலதிக வகுப்புகள்,கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.