தனியார் வகுப்புக்கு நிறைவடைந்ததன் பின்னர், அருகில் இருக்கும் ஆள் நடமாற்றம் இல்லாத வீதியில் காதல் ஜோடி நடந்து சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது வாகனத்தில் வந்து, காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், காதலியின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பன் ஆகிய மூவரும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 17 வயதான இளைஞனும், 18 வயதான யுவதியுமே தனியார் வகுப்புக்குச் சென்று அந்த வீதியில் கைக்கோர்த்து நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது வாகனமொன்றில் வந்த மேற்படி மூவரும் அவ்விளைஞனை பலவந்தமாக ஏற்றிக்கொண்டு, யட்டவல பிரதேசத்தில் உள்ள தங்களுடைய வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து இளைஞன் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடுமையாக அச்சுறுத்தியதன் பின்னர் அதே வாகனத்தில் ஏற்றிவந்த அம்மூவரும், தித்தவல பிரதேசத்தில் உள்ள மாணவனின் வீட்டுக்குச் சென்று அவரை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தாக்குதல்களுக்கு இலக்கான மாணவன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கட்டுகஸ்தோட்டை பொலிஸார், மாணவின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பனை கைது செய்தனர். தந்தை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார் ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.