மாணவர்களின் பெற்றோருக்குக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களின் பெற்றோருக்குக்கான அறிவித்தல்!


நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


இதனால், அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த வைரஸ் தொற்று பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது.


எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதேபோல், தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


இன்புளுவென்சா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட கொவிட் தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.