கம்பளையில் கொலை செய்யப்பட்ட 22 வயதுடைய யுவதியின் (முனவ்வரா) ஜனாஸா நல்லடக்க விடயங்கள் இன்று (14) மாலை இடம்பெற்றன.
குறித்த பெண்ணின் ஜனாஸா (உடலம்) நேற்று தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து முறைப்படி குறித்த பெண்ணின் ஜனாசா இன்று மாலை 3.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும், யுவதியின் மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்பே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.