கல்கிஸை பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் (பாயிஸ் முகமத் நாஸிர்) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் ஜனாசா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னைய பதிவு:
https://www.yazhnews.com/2023/05/29.html