சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கைபேசிகளுடன் நேற்று (23) இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று மாலை நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்ததாக செய்திகள் வெளியாகின.
மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து நேற்று நாடு திரும்பிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளுடன் கைதானர்.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரபுக்கள் முனையத்தில் வைத்து கைதானார்.
அவரிடம் சுங்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 75 இலட்சம் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டுட்டதாக சுங்கத் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.