கொழும்பு நகரின் பல இடங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (12) பிற்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர், கழகம் அடக்கும் பிரிவினர் மற்றும் முப்படையினர் கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி மாவத்தை, சுதந்திர சதுக்கம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியனவற்றை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள அரசின் உயர்மட்ட புலனாய்வு தகவல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலைமைய ஆய்வு செய்து பாதுகாப்பினை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.