உள்ளுர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அரச வங்கிகளில் கடன் பெற்ற அரசியல்வாதிகளின் கடன்களை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் பிரதான வங்கிகளில் வாராக் கடனாக மாறியுள்ள கடன் பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்தும் வியாபாரம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
மாத்தளையில் குறிப்பிட்ட ஒரு அரசியல்வாதி ஹோட்டலுக்கு வாங்கிய கடனை செலுத்தாமல் ஹோட்டலை நடத்துவதாகவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவர் தனது வியாபாரத்திற்காக பெருந்தொகையான கடனைப் பெற்றுக் கொண்டு அந்த வியாபாரத்தை கைவிட்டு வேறு தொழிலை நடத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு செலுத்தப்படாத பலம் வாய்ந்தவர்களின் கடனை உடனடியாக மீட்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)