வட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் B.C.S. பெரேரா தெரிவித்துள்ளார்.