வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டதாகவும் அதனையடுத்து திருடன் தப்பிச்சென்ற போது வீட்டின் பின்புறம் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வந்த பொலிஸார் ஏணியை வைத்து திருடனை மீட்டெடுத்து கைது செய்துள்ளனர்.