லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை தோராயமாக 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு நாளை (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ காஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)