களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பத்த எனும் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சடித்த குற்றச்சாட்டின் பேரில் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில் வந்த பெண் ஒருவர் போலியான 5000 ரூபா நாணயத்தாள் கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ததாக அப்பகுதி கடைக்காரர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அடுத்து, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் 47 வயதுடைய அவரது மனைவியாக இருக்கும் பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள தம்பதியினரின் வீட்டில் இருந்து பதினொரு 5000 ரூபாய் நோட்டுகள் மற்றும் போலி நாணயத்தை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)