அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
பௌத்த தத்துவம் மற்றும் கலாசாரம் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்த நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட பெண்ணும் மற்றொரு நபரும் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)