புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள், கடந்த இருபத்தி மூன்றாம் திகதி பாரிய தங்க கடத்தல் ஒன்றில் ஈடுபட்டதன் காரணமாக இலங்கை சுங்கப்பகுதியினரால் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இவரை ராஜினாமா செய்யுமாறு பல்வேறு ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு இவரை பாராளுமன்ற உருப்பினர் பதவியில் இருந்து பதவி விலக்குவதற்கான பிரேனை ஒன்றும் பாராளுமன்ற உருப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியான புத்தளம் பகுதிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், பல்வேறுபட்ட தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு , புத்தளத்தில் ஒரே ஒரு முஸ்லிம் குழுவே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு எட்டப்பட்ட இந்நிலையிலே ஒரு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியும் என முடிவு செய்யப்பட்டு, அனைத்து தரப்பிலிருந்தும் உருவாக்கப்பட்ட சுயேச்சை குழுவால் பாராளுமன்றம் தெளிவான புத்தளம் மக்களின் முஸ்லிம் தங்கத் தவப்புதல்வன் அலிஸப்ரியாவார்.
இதைத் தொடர்ந்து இவரை பதவி விலகும் படி பல்வேறுபட்ட முஸ்லிம் அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் குற்றம் செய்யவில்லை எனவும், தான் ஒரு போதும் பதவியில் இருந்து விலகப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-பேருவளை ஹில்மி