மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனே சத்தரதன தேரர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சக பிக்கு பஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் ராஜாங்கனே சத்தராதன தேரர் கருத்து வெளியிட்டதாக முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)